விராட்கோலியின் புதிய சாதனை! ஷாம்பைனுடன் கொண்டாட சச்சின் ரெடி!!

மும்பை: ஒருநாள் போட்டியில் தனது சாதனையை விராட்கோலி முறியடித்தால் ஷாம்பைன் பார்ட்டிதான் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழாவில் சச்சின், விராட்கோலி பங்கேற்றனர்.விராட்கோலி ஒருநாள் போட்டியில் 50வது சதமடித்து சச்சினின் 49வது சதத்தை கடந்துவிட்டார் என்றால்., நீங்கள் எப்படி கொண்டாடுவீர்கள் என்று சச்சினிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சச்சின், 50-வது சதத்தை விராட் கோலி அடித்துவிட்டால், அவருக்கு 50 ஷாம்பைன் பாட்டில்களை எல்லாம் அனுப்பிவைக்க மாட்டேன்.
நானே ஒரு ஷாம்பைன் பாட்டிலை வாங்கி, அவரைத் தேடிச்சென்று பாராட்டுவேன்.
அவருடன் அந்த ஷாம்பைன் பாட்டிலை பகிர்ந்து, இருவரும் ஒன்றாகக் குடிக்கவேண்டும் என்பதே என்ஆசை என்றார்.இதேகேள்விக்கு பதிலளித்த விராட்கோலி,
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சச்சின் டெண்டுல்கர் விளையாடும் விதத்தைப் பார்த்துதான் செதுக்கிக்கொண்டேன். 2008ல் இந்திய அணியில் இடம் பெற்றேன்.என்னை ஒரு ஜூனியர் வீரராகப் பார்க்காமல், சச்சின் டெண்டுல்கர் என்னுடன் அன்பாகப் பழகினார், அவர் மீது அதிகமான மதிப்பு வைத்துள்ளேன்.
வாழ்க்கையில் நாம் பிரமித்து பார்த்தவர்கள் நம்மை பாராட்டுவதை காட்டிலும் சிறந்த விஷயம் வேறெதுவும் இல்லை. இவ்வாறு விராட்கோலி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here