சச்சின் பிறந்தநாள் டுவிட்! ஆஸி.க்கு ரசிகர்கள் பதிலடி!!

மும்பை: இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படுகிறார் சச்சின் டெண்டுல்கர். இன்று அவரது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்.உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சச்சினை சீண்டும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தது.

ஆஸி. கிரிக்கெட் வீரர் டேமியன் ப்ளம்மிங்கும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
அவரது பாலில் சச்சின் அவுட் ஆவதுபோன்ற விடியோ வெளியிட்டு இருவரையும் வாழ்த்தியிருந்தது.
இதனால் சச்சின் ரசிகர்கள் கோபமடைந்தனர். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை சச்சின் ஆகாயத்துக்கு விரட்டிய படங்கள், விடியோக்களை வெளியிட்டு பதிலடி கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here