நாடாளுமன்றத்திலும் பாலியல் வற்புறுத்தல்!! ரேணுகா சவுத்ரி பரபரப்பு பேச்சு!!

டெல்லி: நாடாளுமன்றத்திலும் பெண்கள் பாலியல் வற்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்று சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் எம்.பி. ரேணுகாசவுத்ரி.கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பங்கேற்ற ரேணுகாசவுத்ரி, பிரதமர்ஆதார் குறித்து பேசுகையில் சத்தமாக சிரித்தார்.
அதற்கு பிரதமர் ராமாயணம் சீரியலில் சூர்ப்பனகையின் சிரிப்பு போன்றுள்ளது என கண்டித்தார்.
அதனை தொடர்ந்து பாஜக பிரமுகர் கிரண்ரிஜ்ஜூ சூர்ப்பனகையின் சிரிப்பு விடியோவை வெளியிட்டார்.இதனை நினைவுகூர்ந்து ரேணுகா சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
ரேணுகா சவுத்ரி பேசுகையில், “சினிமாத்துறையில் மட்டும் கிடையாது, எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்திலும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றது.
பெண்கள் பாலியல் ரீதியாக வற்புறுத்தப்படுவதற்கு பாராளுமன்றம் விலக்கல்ல. இது ஒரு கசப்பான உண்மை.பிரதமர் மோடி எனக்கு எதிராக பாராளுமன்றத்தில் தரக்குறைவான கருத்தை தெரிவித்த போது, ஒரு பெண்ணாக என்னுடைய கண்ணியத்தை பறித்துவிட்டார்,
“பாராளுமன்றத்தில் பிரதமர் ஒரு பெண்ணை அவமதிக்கும் போது, கிரண் ரிஜ்ஜு ஆட்சேபனைக்குரிய வீடியோவை வெளியிட்ட போது எனக்கு அவதூறை ஏற்படுத்தியது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here