2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயின் சோகம்!

கடலூர்: கடலூர் மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சசிகலா. வினோத் அத்தை மகளை காதலித்து 5 வருடங்களுக்க முன் திருமணம் செய்தார்.தற்போது வினோத் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 3 மாத குழந்தையுடன் சசிகலா தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இரண்டாவது குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் சசிகலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.சிகிச்சைக்காக கணவர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த மாமியாரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர்.அங்கு இறந்து கிடந்த இரு குழந்தைகளையும் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் சசிகலாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து அவர் கூறும்போது இரண்டாவது குழந்தை ஆபரேஷன் மூலம் பிறந்தது. இதனால் உடல் நலனில் ஏற்பட்ட பிரச்சினையால் மிகுந்த மன வேதனையில் இருந்தேன்.இதனால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டால்
எனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்வார் என்ற எண்ணத்தில் கொலை செய்து தற்கொலைக்கு முயன்றேன் என்று கண்ணீருடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here