சட்டவிரோத கருக்கலைப்பால் உயிரிழப்பு! மருத்துவமனைக்கு சீல்!!

சேலம்: சேலம் மாவட்டம் வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி லட்சுமி. கர்ப்பிணியான் இவர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்று கூறுவதுசட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் கருவில் இருப்பது பெண் சிசு என்று மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லட்சுமி அதே மருத்துவமனையில் கருகலைப்பு செய்து கொண்டார். ஓரிரு நாளில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துள்ளார்.
லட்சுமியின் கணவர் செய்த புகாரின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருத்துவரை கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here