ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இனிக்கும் செய்தி!

மும்பை: ஏர்செல் சிம்கார்டில் பயன்படுத்தாத பேலன்ஸ் தொகை திரும்ப கிடைக்க உள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது. அது கைமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் திவாலாகியதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏர்செல் சிம் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தாங்கள் ரிசார்ஜ் செய்தும் பேசாத தொகையை திரும்ப வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இதுகுறித்து புகார்கள் குவிந்தன.
அதுதொடர்பாக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ் தொகை, டெபாசிட் பணம் ஆகியவற்றை திரும்ப அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மே.10ம் தேதிக்குள் ஏர்செல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பிற செல்போன் நிறுவனங்கள் ஏர்செல் வாடிக்கையாளர்களின் மீதத்தொகையை வரவுவைத்து அவர்களுக்கு குறுஞ்செய்தியில் தகவல் அளிக்கவேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here