பேயாக நடிக்கிறார் சாந்தினி!

சென்னை: இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கும் முதல்படம்.தம்பி உன்னிகிருஷ்ணன் ஜே.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து ரியங்கா பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இந்த படம் திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகிறது.
எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் திலீபன்  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசை அமைக்கிறார். டி.ஆர்.பிரவீன் படத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். இவர்கள் இருவரும் சகோதரர்கள். ஒளிப்பதிவை ஹேமந்த் மேற்கொள்கிறார். பிச்சைக்காரன் சலீம் படங்களில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டர் ஆனந்த் மணியும் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here