எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனையோ அர்ச்சனை!!

சென்னை: மீம்ஸ் உருவாக்குவோருக்கு ’வெறும் வாயில் கிடைத்த வெல்லம் சேர்த்த அவல்’ ஆகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக திரையரங்குகளில் புதிதாக அரசு விளம்பரம் காண்பிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கொடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், தன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டாம் என்றும் கோவில் பூசாரியிடம் தெரிவிக்கிறார்.                                                                                              பின்னணியில் ஏழுமலையானை போன்று முதல்வர் சித்தரிக்கப்படுகிறார். இந்த விளம்பரம் மீது மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.   

இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வரை கண்டித்துள்ளார். கடந்த 15மாதங்களாக முதல்வர் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை.  அரசு விளம்பரத்தில் முதல்வர் ஏழுமலையானாக சித்தரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படியே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4%வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here