தினகரனுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை!!

சென்னை:தினகரன் கட்சி ஒரு காளான் கட்சி. அவருடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று தெரிவித்துள்ளார் திவாகரன்.
சிறையில் உள்ள சசிகலாவை மீட்க முதல்வர் எடப்பாடியுடன் திவாகரன் இணைந்து செயல்படுவதாக செய்திகள் வெளியாகின. தினகரன் தவறுகளை பொறுத்துக்கொண்டு வருகிறோம் என்று பதிவிட்டிருந்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்.இதனை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடிதரும் வகையில் திவாகரன் இன்று பேட்டியளித்துள்ளார். அதன் விபரம்:வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படப்போவதில்லை.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காகவே கட்சியை தொடங்கியுள்ளார்.
அண்ணாவும் திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் எப்போதும் ஏற்கமாட்டோம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்.அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என்று தினகரன் நினைக்கிறார்.
கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தன்னிச்சையாக தினகரன் கட்சி தொடங்கியுள்ளார்.
நானும் எனது மகனும் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பதாக அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை.

 

வெற்றிவேலும், செந்தில்பாலாஜியும் அதிமுகவில் இடையில் வந்தவர்கள்.
அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
தேவைப்பட்டால் தேர்தலிலும் போட்டியிடுவோம். இவ்வாறு திவாகரன் பேட்டியளித்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here