பிரதமர் தருவதாக கூறிய ரூ.15லட்சம்! கேட்பதற்கு வழியே இல்லையாம்!!

டெல்லி:இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்த கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கில் ரூ.15லட்சம் தருவேன் என்று கடந்த பொதுத்தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.அந்த வாக்குறுதி தொடர்பாக மோகன்குமார்ஷர்மா என்ற சமூக ஆர்வலர் விபரம் கோரியிருந்தார்.

பிரதமர் அலுவலகத்துக்கு மோகன்குமார் ஷர்மாவின் மனு அனுப்பிவைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம் மோகன்குமார் ஷர்மா கோரியுள்ள விபரங்கள் ‘தகவல்’ என்ற பிரிவில் வராது என்று தெரிவித்துள்ளனர். அதாவது வாக்குறுதிகள் தகவல் என்று கருதமுடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தம் வாயிலாகவோ, மின்னணு வடிவத்திலோ பிரதமர் அதுபோன்று எத்தகையை தகவலையும் அளிக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here