Connect with us

Crime

ஏடிஎம்களில் பணம் திருடிய அரசு மருத்துவர்!

Published

on

புதுச்சேரி: புதுச்சேரியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமாக பணம் எடுக்காமலே பணம் எடுக்கப்பட்டதாக வங்க வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் சென்றுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புதுச்சேரி போலீசில் புகார் தெரிவித்தனர்.விசாரணையில் ஏடிஏம் கொள்யைர்கள் ஸ்கிம்மர் கருவி மூலமாக ஏடிஎம்மில் தகவல்களை திருடி போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பணம் எடுப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பணம் திருடப்பட்ட ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்துபோலீசார் திருடர்களை பிடித்துள்ளனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக இருப்பவர் விவேக். சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் கூட்டு சேர்ந்து ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
திருட்டில் 70 சதவிகித பணம் விவேக்கிற்கு சென்றுவிடும். மீதமுள்ள பணம் ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளும் பங்கிட்டுள்ளனர். போலீசார் விவேக்கிடமிருந்து 4 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator