ஆப்பிள் சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம்!

வாஷிங்டன்:விமானத்தில் வழங்கப்பட்ட ஆப்பிளை சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாரிஸை சேர்ந்தவர் கிறிஸ்டல். வாஷிங்டனுக்கு விமானத்தில் வந்தார்.விமானத்தில் ஆப்பிள் அவருக்கு தரப்பட்டது. பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து தனது கைப்பையில் பத்திரப்படுத்தினார்.
விமானம் கொலராடோ நகரில் நின்றது. அவ்விமான நிலையத்துக்கு ஓய்வெடுக்க சென்றார் கிறிஸ்டல்.
அப்போது அவரது கைப்பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஆப்பிள் அகப்பட்டது.

வேறு நாடுகளில் இருந்துவிவசாய விளைபொருட்களை கொலராடோ நகருக்கு எடுத்துவருவது குற்றம் என்று விமான நிலைய போலீசார் கூறினார்.
தனது நிலையை விளக்கிய கிறிஸ்டல், வேண்டுமானால் உங்கள் முன்னால் சாப்பிடுகிறேன். நீங்கள் விரும்பாவிட்டால் இங்குள்ள குப்பைத்தொட்டியில் போடுகிறேன். இரண்டும் வேண்டாம் என்றால் நீங்களே கூட எடுத்துக்கொள்ளுங்கள் என்று துடுக்காக பேசினார். இதனால் போலீசார் கோபமடைந்தனர்.

நீங்கள் சாப்பிடவேண்டாம். அபராதமும் இங்கே கட்டவேண்டாம். நீதிமன்றம் சென்று உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் என்றுகூறி 500டாலர் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here