திருடன் என நினைத்து அப்பாவி இளைஞர் கொலை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்டத்தில் உள்ள சுமங்கலி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக தகவல் பரவியது. கிராமத்தினர் கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.தென்மண்டலத்தைச் சேர்ந்த சதாசிவம் என்ற இளைஞர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை திருடன் என் நினைத்து அந்த இளைஞரைத் திருடன் என நினைத்து கிராமத்தினர் தாக்கினர்.இதனால் சம்பவ இடத்திலேயே சதாசிவம் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சதாசிவத்தின் உறவினர்கள் சதாசிவத்தைக் கொலை செய்தவர்களைக்
கைது செய் என நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.செய்யாறு டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here