குழந்தையை கொஞ்சும் கொரில்லா! அமெரிக்காவில் வைரலாகும் படங்கள்!!

வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரில்லா குழந்தையை கொஞ்சும் படங்கள் வைரலாக அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகின்றன.
வாஷிங்டன் நகரில் உள்ளது ஸ்மித்சோனியன் தேசிய விலங்கியல்பூங்கா.இங்கு மேற்கு மலை கொரில்லா எனப்படும் குரங்கினங்கள் விலங்குகள் பரிமாற்றத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கலயா, பராக்கா ஜோடி குரங்குகளுக்கு புது வரவாக ஆண் கொரில்லா பிறந்துள்ளது.

தாய் கலயா குட்டிகொரில்லாவை கொஞ்சும் காட்சிகள் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இப்பூங்காவில் பிறந்துள்ள ஆண் கொரில்லாவுக்கு மோக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

24மணிநேரமும் குழந்தை மோக்கை தனது அரவணைப்பிலேயே வைத்திருந்து பாதுகாத்து வருகிறது கலயா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here