நிர்மலா தேவியுடன் தொடர்புடைய பேராசிரியர் சிக்கினார்!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவங்கர் கல்லூரியில் மாணவிகளுக்கு செல்போன்மூலம் தவறான பாதையில் செல்ல தூண்டிய துணை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் கைதான நிர்மலா தேவியை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில் பேராசிரியர் முருகன் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த சிபிசிஐடி போலீசார் துணைவேந்தர் அறையில் காத்திருந்த பேராசிரியர் முருகனை பிடித்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை விடுவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here