மும்பையில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை!

மும்பை: மும்பையின் கண்டிவாலியில் உள்ள கோகுல் நகர் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் காரில் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.சச்சின் காரை வழிமறித்து அவரை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறைசுட்டுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த சச்சினை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து குரர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here