அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஆசை! தங்கமணி திடுக்கிடும் தகவல்!!

நாமக்கல்: ஜெயலலிதா மறைவிற்குபின் அதிமுக இருஅணிகளாக பிரிந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் பிரிந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி டிடிவிதினகரனுடன் இணைந்தார்.இரு அணிகளும் ஒருவரை ஒருவர் குறைகூறி வந்தனர். இதன் உச்சகட்டமாக பிள்ளை பிடிக்கும் கூட்டம் போல் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பழனியப்பனும் செயல்படுவதால் அவர்களைப் பார்த்தாலே எம்.எல்.ஏக்கள் ஓடி ஒளிகிறார்கள் என அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.எம்.எல்.ஏக்களைப் பிடிக்க இவர்கள் இருவரையும் டிடிவி தினகரன் ஏவி விட்டுள்ளார் என அமைச்சர் தங்கமணி விமர்ச்சனம் செய்திருந்தார். மேலும் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தன்னை விட்டு போய்விடாமல் இருக்க அவர்களுக்கு முதல்வர் ஆசை காட்டி அமைச்சர்கள் 18 பேரையும் தக்க வைத்துள்ளதாக கூறியிருந்தார்.இந்நிலையில் நாமக்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அமைச்சர் தங்கமணி.
டிடிவி.தினகரன் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற எண்ணத்தில் செந்தில்பாலாஜி உள்ளார்.டிடிவி சிறை சென்றால் முதல்வர் பதவியை பிடித்து விடலாம் என்ற நோக்கத்தில்
செந்தில் பாலாஜி செயல்படுகிறார். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு மத்திய அரசிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவரிடமும் பேசியுள்ளார். இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என அமைச்சர் தங்கமணி திடுக்கிடும் தகவலை தெவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here