எதிர்ப்புகளை வீழ்த்தும் எடப்பாடி! சசிகலா குடும்பத்தில் பூகம்பம்!!

சென்னை: எதற்கும் அசையாதவர் என்று பெயர்பெற்றுவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எந்த எதிர்ப்பையும் வீழ்த்துபவராகவும் உள்ளார்.
தினகரன் முகாமை அவர் அசைத்துவருவது முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் முகநூல் பதிவு மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதிமுகவில் தினகரன் ஆதரவாளர்களாக 18பேர் உள்ளனர். இவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
இத்தீர்ப்பு வருவதற்கு முன் தினகரன் கூடாரத்தை கலைக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வேகமாக காய்களை நகர்த்தி வெற்றிபெற்றுவருகிறது.சசிகலாவை வெளியே கொண்டுவர உதவுகிறேன் என்று திவாகரனிடம் உறுதியளித்து காய்களை நகர்த்தியுள்ளது ஆளும்கட்சி தரப்பு.
அதற்கு திவாகரனும், அவரது மகன் ஜெய் ஆனந்த், விவேக் ஆகியோர் முதலமைச்சரோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதிவில் கூறியுள்ளதாவது:மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சின்னம்மா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்கு சென்றார்.
ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகி போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது.
இதனை முதலில் சின்னம்மா ஏற்றுக்கொள்வாரா?.தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள்
நாங்கள் எப்போதும் தினகரன்பக்கம்தான் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சி தொடர மத்தியில் இருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. எனவேதான் நமது அம்மா இரட்டைக்குழல் துப்பாக்கி என்கிறது, சசிகலா விரைவில் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.

நடராஜன் இருந்தபோதே இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அவர் இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளை தெரிந்துகொண்டு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here