துப்பாக்கியால் மிரட்டி வங்கியில் கொள்ளை! வாலிபரை விரட்டிப்பிடித்தனர் மக்கள்!!

சென்னை: துப்பாக்கியால் மிரட்டி வங்கியில் கொள்ளையடித்து சென்றவரை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.அடையாறு இந்திராநகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இன்று காலை மர்மநபர் ஒருவர் வந்தார்.
கைத்துப்பாக்கியை காட்டி அங்கிருந்த ஊழியர், வாடிக்கையாளர்களை மிரட்டினார்.
பின்னர், வாடிக்கையாளரிடமிருந்த பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினார்.அவரை பிடிக்க வங்கி காவலர்கள் முயன்றனர். அவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்நபர் தப்பிச்செல்கையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டார்.அவரிடமிருந்து 2துப்பாக்கிகள், ரூ.6.23லட்சம் மீட்கப்பட்டன.
சாஸ்திரிநகர் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
அவர் கேளம்பாக்கத்தை சேர்ந்த மணிஷ்குமார் என்று தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here