விலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய மருந்து! மனிதா்களிடம் சோதித்த கொடுமை!!

ராஜஸ்தான்: மருத்துவ ஆய்வில் புதிதாக தயாரிக்கப்படும் மருந்தை சோதனை அடிப்படையில் குரங்கு எலி முயல் போன்ற விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்வது வழக்கம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட மருந்து தவறான கலவையாக இருக்குமானால் மருந்து செலுத்தப்பட்ட விலங்கு பாதிப்புக்குள்ளாகும். அல்லது உயிரிழக்க நேரிடும்.ராஜஸ்தானில் பீடாஸர் பகுதியில் இயங்கி வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனம் புதியதாக தயாரித்த மருந்தை மனிதர்களுக்கு நேரடியாக கொடுத்து விபரீத  சோதனையை மேற்கொண்டுள்ளது.இதற்காக நாளொன்றுக்கு ரூ.500 ஊதியம் கொடுத்து 21 பேரை வேலைக்கு அமர்தியுள்ளது. நிறுவனம் புதிதாக தயாரித்த மருந்து ஒன்றை ஊழியர்களுக்கு கொடுத்து சோதனை செய்துள்ளனர்.மருந்தை உட்கொண்ட ஊழியர்கள் 16 பேர் மயக்கமடைந்துள்ளனர். அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் காளிசரண் ஷராப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here