ஆண்ட்ரியா, மடோனா சேர்ந்து நடிக்கும் திரில்லர் படம்!

சென்னை: விடியும் முன் திரைப்படத்தை இயக்கிய பாலாஜி குமார் சொல்லாதே யாரும் கேட்டால் என்ற படத்தை இயக்க போகிறார். இதில் ஆண்ட்ரியா பிரசன்னா மடோனா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.இப்படத்தின் திரைக்கதையை படித்த ஆண்ட்ரியாவுக்கும் பிரசன்னாவிற்கும் கதை மிகவும் பிடித்துள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கும் மடோனா இந்தியா திரும்பிய பின் திரைக்கதையை படிக்க இருக்கிறார்.
சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் இசையமைக்கிறார். எடிட்டிங் வேலையை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். பிரபலமான நாவல் ஒன்றை தழுவி உருவாகவுள்ளது. சொல்லாதே யாரும் கேட்டால் திரைப்படம் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here