தனக்குத்தானே சிசேரியன் செய்து குழந்தை பெற்ற நர்ஸ்!

அமெரிக்கா:நர்ஸ் ஒருவர் தனக்குத்தானே சிசேரியன் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ளார்.
இந்த ஆச்சர்ய சம்பவம் அமெரிக்காவின் ப்ராங்பர்ட் நகரில் உள்ள மண்டல மருத்துவமனையில் நடந்துள்ளது.அம்மருத்துவமனையில் பயிற்சிநர்ஸாக பணியாற்றுபவர் எமிலி டயல்.
இரண்டாவது முறையாக இவர் கருவுற்றார்.
பிரசவநேரம் நெருங்கியதும் ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு டாக்டர்கள், நர்ஸ்களைப்போன்று அவரும் ஆடைகளை அணிந்துகொண்டு கட்டிலில் படுத்தார். டாக்டர்கள் அவர் அடிவயிற்றை கிழித்ததும் தானே குழந்தையை வெளியே எடுத்தார்.
அப்பெண் குழந்தையை தாயிடம் இருந்து டாக்டர்கள் பிரித்தெடுத்தனர்.

அதற்கு தேவையான உதவிகளையும் எமிலிடயலே செய்தார். இது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது.
தான் குழந்தை பெறுவதை படமெடுக்க மருத்துவமனை நிர்வாகத்தில் சிறப்பு அனுமதி பெற்றுவைத்திருந்தார். பிரபல புகைப்பட கலைஞர் சாராஹில் எடுத்த அப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here