சந்தானம் விசாரணைக்கு அரசு முட்டுக்கட்டை!

சென்னை: பேராசிரியை விவகாரத்தில் கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானத்தின் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடும் வகையில் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு வலைவிரித்தார் பேராசிரியை நிர்மலாதேவி.
அவரது செல்போன் பேச்சில் கவர்னர் என்று இடம்பெற்றிருந்தது.
நிர்மலாதேவி யார் என்றே எனக்கு தெரியாது. அவர் முகத்தை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோகித்.இதுகுறித்து விசாரிக்க முன்னாள் ஆளுநர் மாளிகை அதிகாரி சந்தானத்தை நியமித்தார்.
சந்தானம் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு திருச்சி சிறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், போலீஸ் விசாரணை முடிவடையும் வரை சந்தானம் விசாரணை நடத்த அரசுதரப்பில் முட்டுக்கட்டை போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நாளைமறுதினம் நிர்மலாவிடம் கூடுதல் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அவகாசம் பெறக்கூடும் என்றும், மதுரை பல்கலைக்கழகத்துக்கு அவர் அழைத்துச்சென்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இதற்கிடையே நிர்மலாவின் வீட்டில் இருந்து முக்கிய பொருட்களை கைப்பற்றிய போலீசார் வீட்டை சீல் வைத்துவிட்டனர்.
இதுவும் சந்தானம் விசாரணைக்கு முட்டுக்கட்டையான ஒரு நடவடிக்கை என்று போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here