கிரிக்கெட் வீரர் ஷீகர்தவான் செய்த குறும்பு!

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஷாகிப் அல் ஹசனிடம் விமானத்தில் அதே அணியைச் சேர்ந்த வீரர் ஷீகர் தவான் செய்த குறும்பு விடியோ வைரலாகி வருகிறது.

ஐதராபாத் அணி வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து, சண்டிகருக்கு விமானம் மூலம் சென்றனர்.
அப்போது ஷாகிப் அல் ஹசன் களைப்பில்தூங்கினார்.
அவரையே அறியாமல் குறட்டை சத்தம் வந்துள்ளது.அருகில் இருந்த ஷீகர் தவான், ஷாகிப்பிற்கு அருகில் சென்று அவரின் மூக்கில் காகிதத்தை விட்டு குறட்டை ஒலியை நிறுத்த குறும்பு செய்கிறார்.
பதறி அடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து, எழுந்தார் ஷாகிப்.ஷீகர் தவானை பார்த்து அவர் குறும்புத்தனத்தை தெரிந்துகொண்டு சிரிக்கிறார்.
இந்த காட்சிகளை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here