ஸ்கீம் என்றால் ஸ்கீம்தான்! காவிரி வாரியம் அல்ல!!

பெங்களூர்:காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’என்பது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடித விபரம்:காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் என்பதே அரசியல்சாசனத்துக்கு விரோதமானது.
காவிரி நதிநீர் நடுவர்மன்ற தீப்பாயத்தின் தீர்ப்பு என்பது உத்தரவு கிடையாது அது பரிந்துரைகள் மட்டுமே.காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்ற திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்குப் பதிலாகத்தான் ஸ்கீம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது.இதுபோன்ற அமைப்பை உருவாக்குவது என்பது, இந்திய அரசியல்சாசனத்தின் கூட்டாச்சி முறையைச் சீர்குலைத்துவிடும். மாநில அரசின் நீர்மேலாண்மைக்கான அதிகாரத்தைப் பறிக்கும் விதத்தில் அமைந்துவிடும் .ஸ்கீம் தொடர்பாக இரு திட்டங்களை கர்நாடக அரசு சார்பில் அனுப்பி வைத்துள்ளேன். அதுதொடர்பாக தங்களிடம் நேரில் பேச விரும்புகிறேன். இவ்வாறு சித்தராமையா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here