சிறுமிகளை சீரழித்தால் தூக்குத்தண்டனை! அவசர சட்டம் மீது அதிருப்தி!!

டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்ற அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இச்சட்டம் குறித்து மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.புதியசட்டத்தின்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்படும்.
அதேபோல், 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தாலும் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டு சிறை என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் சிக்குவோர் முன்ஜாமீன் கோர முடியாது.

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டு 2மாதத்தில் முடிக்கப்படும். மேல்முறையீட்டு மனுக்கள் 6மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

இதுதொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் விரிந்தா குரோவார் பேசியபோது கூறியதாவது, ‘குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் வழக்குகளில் 94.6சதவீத குற்றங்கள் உறவினர்கள் அல்லது நெருக்கமானவர்களால் இழைக்கப்படுகின்றன.
எனவே, குற்றங்களில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை 18% என்றுள்ளது.
உச்சபட்ச தண்டனை வழங்கப்படுவதால் இது மேலும் குறையவே வாய்ப்புள்ளது.தொண்டுநிறுவன நிர்வாகி பாரதி அலி கூறுகையில், பாலியல் கொடுங்குற்றங்களை வயதின் அடிப்படையில் அரசு பிரித்திருப்பது ஏற்க முடியாதது. சில பாலியல் வல்லுறவுகள் சரி என்றும், சில தவறு என்றும் அரசே வகைப்படுத்தும் நடவடிக்கையாக இது உள்ளது என்றும் தெரிவித்தார்.
இப்புதிய சட்டம் குறித்து ஜனநாயக ரீதியாக அனைத்துகட்சிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here