முஸ்லிம் டிரைவரின் ஓலா கார் புறக்கணிப்பு! டுவிட்டரில் வெடித்தது சர்ச்சை!!

லக்னோ: முஸ்லிம் டிரைவர் என்பதால் ஓலா வாகனத்தில் பயணிக்காமல் திருப்பி அனுப்பினேன் என்று விஎச்பி நிர்வாகியின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார் அபிஷேக்மிஸ்ரா.
அவர் இரு தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் இட்டபதிவில் ஓலா புக் செய்தேன். காரைஓட்டிவந்தவர் முஸ்லிம். எனவே அதனை கேன்சல் செய்துவிட்டேன். எனது பணம் ஜிகாதிகுழுவுக்கு செல்ல மனது சம்மதிக்கவில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார்.

அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகத்துக்கு விரோதமான பதிவுகளை இட்டதாக அவர் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதற்கிடையே, எனது கருத்துக்களை எதிர்ப்பவர்கள் பெங்களூர் பெண் ரேஷ்மி என்பவர் ஓலா, உபேர் டாக்சிகளில் ஒட்டப்பட்டுள்ள அனுமார் ஸ்டிக்கர்களை கண்டித்து எழுதிய பதிவை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார் அபிஷேக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here