மீடியாக்களுக்கு மசாலா தரக்கூடாது! பாஜக பிரமுகர்களுக்கு மோடி வாய்ப்பூட்டு!!

டெல்லி: பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு போட்டுள்ளார். மீடியாவில் சமூக விஞ்ஞானிகள் போல உளறிக் கொட்டவேண்டாம் என தனது கட்சி தலைவர்களை கடிந்துகொண்டுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பாஜக நிர்வாகிகள் கருத்து சர்ச்சை அளித்தது.
தமிழகத்திலும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற பாஜக பிரமுகர்களின் கருத்துக்களால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதனால் கட்சித்தலைமை கடும் தர்மசங்கடத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், நமோ ஆப்-ல் உள்ள விடியோ சாட்டிங் வசதியில் பிரதமர் மோடி கட்சித்தலைவர்களிடம் பேசினார்.அப்போது, சமூகவிஞ்ஞானிகள் போன்று நமது கட்சித்தலைவர்கள் பேசவேண்டாம்.
மீடியாக்களுக்கு மசாலா தரவேண்டாம். நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது.
தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும் இது நடக்கிறது.கொஞ்சமும் கவலைப்படாமல் கருத்துக்களை மீடியாக்களில் தெரிவித்து வருகிறோம்.
நீங்கள் அள்ளித் தெளிக்கும் மசலா கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.
பொது பிரச்சனைகளில் வரம்புமீறி பேசவேண்டாம். இவ்வாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here