ரத்தம் சொட்டசொட்ட காவல்பணி! அதிகாரிக்கு குவியும் பாராட்டு!!

சென்னை:கல்வீச்சில் காயம்பட்டு ரத்தம்சொட்டசொட்ட போக்குவரத்தை சீர்செய்த காவல் அதிகாரிக்கு இணையத்தில் பாராட்டு குவிந்துவருகிறது.
செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டியில் சாலை விபத்து ஏற்பட்டது.அரசு பேருந்தும், இரு சக்கரவாகனமும் மோடிக்கொண்ட விபத்தில் இளம்பெண் இறந்தார்.
அவர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 5.கி.மீ.தூரத்துக்கு இருபுறமும் முடங்கின.செங்கல்பட்டு எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். அதில் எஸ்பியின் தலையில் காயம் ஏற்பட்டது.
கைக்குட்டையால் தலைக்காயத்தை பிடித்தவாறு போக்குவரத்தை சீர்செய்யும் பணியை தொடர்ந்தார் எஸ்பி.

இறந்தபெண்ணின் உடலை ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
போக்குவரத்து சீராகியதும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி எடுத்துக்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடமை தவறாத பணியை இணையத்தில் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here