செல்போன் வெடித்து பெண் பலி!

கடப்பா: சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை கேட்டு அப்பெண்ணின் உறவினரும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள கலூருபள்ளே தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தம்மா. விவசாய தொழிலாளியான சாந்தம்மா, தனது கணவனை இழந்தவர். இரு மகன்களுடன் வாழ்ந்துவந்தார்.இன்று செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு சமையலை கவனித்து வந்தார்.
சுமார் ஒருமணி நேரம் கழித்து சார்ஜர் போடப்பட்டிருந்த போனை திரும்ப எடுக்க முயன்றார்.
எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்தது. உடலில் மின்சாரம் பாய்ந்து, சாந்தம்மா இறந்தார்.

இத்தகவலை ஹைதராபாத்தில் இருக்கும் அவரது அக்கா மகனான ஈஸ்வர் நாயக்கிடம் தெரிவித்தனர்.
தனது சித்தி உயிரிழந்ததைக் கேட்ட ஈஸ்வரால் தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here