’அச்சே தின்’ அவருக்கு மட்டும்தானாம்!

மும்பை: நேர்மையானவர், எளிமையானவர் என்று 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிருத்தப்பட்டவர் நரேந்திரமோடி.
பதவிக்கு வந்தபின் அவரது செயல்களில் பெரும் மாற்றம்.
காதி அணியுங்கள் என்று வானொலியில் கேட்டுக்கொள்வார்.வெளிநாட்டு அரசியல்தலைவர்களை டெல்லியில் வரவேற்க செல்லும்போது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்,ஷூ அணிந்து செல்வார்.
இதனால் எதிர்க்கட்சிகள் இவரை கோட்-பூட் சர்க்கார் என்று விமர்சித்தன.அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவந்தபோது ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் மோடி ஒவ்வொருவித உடையில் ஹாலிவுட் நடிகரைப்போன்று கலக்கலாக வலம்வந்தார்.
இவர் பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்.அதனால் ரூ.1.3லட்சம் மதிப்பு பேனா பயன்படுத்துகிறார். இறக்குமதி செய்யப்பட்ட ஹேர்டிரிம்மர்களை பயன்படுத்துகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒவ்வொரு நவராத்திரியின் போதும் பிரதமர் உண்ணாவிரதம் இருப்பது வழக்கம்.
அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதே இதனை பின்பற்றிவருகிறார்.நவராத்திரியின் போது அவர் அருந்தும் பழச்சாறுக்காக மட்டும் இதுவரை ரூ.10கோடி செலவிடப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ-ல் விபரம் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆர்டிஐ மனுக்களுக்கு தகவல் அளிக்கமுடியாது என மறுக்கப்பட்டுள்ளது.இதனை தவறு என்று சுட்டிக்காட்டியுள்ள தகவல் அறியும் உரிமை ஆணையம், தேதிவாரியாக பிரதமரின் வெளிநாட்டு பயண விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம், ஏர் இந்தியா நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.தினந்தோறும் ஒவ்வொரு இந்தியரும் அச்சேதின்(நல்ல நாள்)வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் இருக்க, பிரதமருக்கு மட்டுமே தினந்தோறும் நள்ளநாளாக இருந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here