மௌன பாபா பிரதமர் மோடி! சிவசேனா கட்சி விளாசல்!!

மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கூறப்பட்டுள்ளது.காஷ்மீர் சிறுமி பலாத்காரம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.மவுன பாபா பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் சென்றார்.
ஆனால் இதைப்பற்றி உள்நாட்டில் கருத்து தெரிவிக்காமல் பிரதமர் மோடி வெளிநாடுகளில் சென்று கருத்து தெரிவித்து வருகிறார்.இந்தியாவுக்கு அவப்பெயரைத் பெற்றுத்தரும் சம்பவங்களை ஏன் மோடி வெளிநாடுகளில் பேசுகிறார் உள்நாட்டில் அவரின் கருத்துக்களை தெரிவிக்கலாமே.மோடிக்காகத் தலைநகரை டோக்கியோ அல்லது லண்டன் நகருக்கோ பாரீஸ் நகருக்கோ நியூயார்க் அல்லது ஜெர்மனுக்கோ மாற்றிவிடலாம். அது சாத்தியமில்லாவிட்டால் கூட அவரின் அலுவலகத்தைக்கூட மாற்றிவிடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here