பணம் மகிழ்ச்சியை தராது! சமண துறவியான கோடிஸ்வர இளைஞர்!

மஹாராஸ்டிரா: மஹராஸ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் மோக்கேஷ் ஷா. ஆடிட்டர் பணி செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஜேகே கார்ப்பரேஷன் என்ற பெயரில் பேக்கிங் மெட்டீரியல் தாயரித்து வருகின்றனர். மேலும் வைர வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 100 கோடி விற்பனை செய்து
லாபம் ஈட்டிவருகின்றனர்.சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மோக்சேஷ் ஷா சமண மதத்தின் மீது ஆர்வம் கொண்டார். சமண துறவியாக விரும்புவதாக பெற்றோரிடம் கூறினார். பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
சமண மதத் துறவிகள் மோக்கேஷ் ஷா சமண துறவிக்கான தீட்சை அளித்து ஆசிர்வாதம் செய்தனர். முன்னதாக மோக்சேஷ் கூறும்போது பணத்தால் எதையும் வாங்க முடியும் என்றால் பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாக வாழலாம். ஆனால் உண்மையான வாழ்க்கையில் அவ்வாறு செய்ய முடியாது.
ஒன்றைப் பெருவதன் மூலம் மகிழ்ச்சியை பெறுவதல்ல இருப்பதை விட்டு விடுவதைத்தான் நித்திய மகிழ்ச்சி என கூற முடியும். படிப்பை முடித்த பிறகு தந்தையின் வணிகத்தை கவனித்தேன். பொருள் சேர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதனால் சமண துறவியாகி விட்டேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here