தாயின் கண்முன்னே 2மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை!

விருத்தாசலம்: விருத்தாசலம் திருவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கண்மணிராஜா. இவருக்கும் கும்பகோணம் செம்மங்குடி ஜமுனாராணிக்கும் இரண்டு மாததிற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.பெண் குழந்தை அழகாக இருந்ததால் ஜமுனாராணியின் நடத்தையில் சந்தேகமடைந்தார். தினமும் குடித்து விட்டு ஜமுனாராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் இரண்டு மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துள்ளார்.
குழந்தை அதே இடத்திலேயே இறந்தது. குழந்தையை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார். கண்முன்னே குழந்தையை அடித்து கொலை செய்த கணவர் மீது ஜமுனாராணி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கண்மணிராஜாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். புதைக்கப்பட்ட குழந்தையையின் உடலை கைப்பற்றி கண்மணிராஜாவை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here