நடிகர் மன்சூர் அலிகானுக்காக மன்னிப்பு கேட்டார் சிம்பு!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என கடந்த 10ம் தேதி சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். இதில் கைதான சீமானை விடுவிக்கக் கோரி பல்லாவரத்தில் போலீஸாருடன் மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து இன்று வரை விடுதலையாகாத மன்சூர் அலிகானுக்காக ஆதரவாக குரல் கொடுத்தார் சிம்பு. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் ஆணையரிடம் விளக்கம் கேட்டார். நிருபர்களிடம் பேசும் போது நான் யாருக்கும் ஆதரவாக இங்கு வரவில்லை. பிரச்னை செய்யவும் நான் இங்கு வரவில்லை.
மன்சூர் அலிகானை ஏன் கைது செய்தார்கள் என அறிந்துகொள்ள வந்தேன். அவர் பேசியது தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here