40ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்தவர்! யூ டியூப் விடியோவால் ஒன்றுசேர்ந்தார்!!

மணிப்பூர்: இம்பால் என்ற நகரத்தைச்சேர்ந்தவர் கோமதிரம் கம்பீர் சிங்(65).
கடந்த 1978-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணமால் போய்விட்டார்.
அதன்பின்பு அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கம்பீர் சிங் மும்பையில் இருக்கும் பல்வேறு ஆலைகளில் வேலை செய்துவந்தார் என்ற தகவல் அட்டுமே கிடைத்து.
2017ல் மும்பை ரயில் நிலையத்தில் கம்பீர் சிங் பாடியதை வீடியோ எடுத்துள்ளார் ஒரு பேஷன் டிசைனர். அதை தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை அன்று கம்பீர் சிங் பாடிய வீடியோவை பார்த்த அவரின் குடும்பத்தார் அவரை எளிதாக அடையாளம் கண்டனர்.இம்பால் காவல் துறையை அணுகி அவரின் புகைப்படத்தை அளித்துள்ளனர்,
அவர்கள் புகைப்படத்தை மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்த்னர்.
அங்கிருந்த கம்பீர்சிங் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here