வாக்காளர் அட்டை வடிவில் திருமண வரவேற்பு பத்திரிக்கை!

பெங்களூர்: கர்நாடக சட்டபேரவை தேர்தல் வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் வாக்கு சேகரிப்பு, வேட்புமனு தாக்கல் என பரபரப்பாக காணப்படுகிறது.இந்நிலையில் திருமண வரவேற்பு பத்திரிகையை வாக்காளர் அடையாள அட்டை வடிவில் தயாரித்து உறவினர்களை வரவேற்க புதுமண தம்பதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியன் ரயிவேயில் பணியாற்றி வரும் சித்தப்பா, ஜோதி இருவருக்கும் வருகிற ஏப்ரல் 27 ம் தேதி திருமணம் நடை பெற உள்ளது.இதற்கான வரவேற்பு பத்திரிகையை வாக்காளர் அடையாள அட்டை போல் வடிவமைத்து உறவினர்களை வரவேற்று வருகின்றனர். அசல் வாக்காளர்
அட்டையை போலவே அதில் தேசிய சின்னம், வாக்காளர் அடையாள அட்டை எண்ணுக்கு பதில் திருமண தேதியை குறிப்பிட்டுள்ளனர்.கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்பத்தும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டை வடிவில் வரவேற்வு பத்திரிக்கையை அச்சிட்டுள்ளனர்.அட்டையின் பின்புறம் பொதுமக்கள் வாக்கு அளிப்பதன் அவசியம், இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் திருமண தேதி, இடம், நாள் குறிப்பிட்டு அச்சிட்டுள்ளனர்.இதற்காக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் மணமகன் சித்தப்பா தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here