தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்! வைகோ வலியுறுத்தல்!!

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்ற ஆறு மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளின்
நாயகராக இருக்கிறார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற உரையாடல் அம்பலமாகியுள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய தேவை என்ன?
அவர் நடந்து கொண்ட முறை குறித்து பெண் செய்தியாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி குறித்த ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது.பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அப்பொறுப்பில் நீடிப்பது மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here