10ம் வகுப்பு மாணவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண்!

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோடம்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ராசு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாணவனை அவரது உறவுக்கார 22 வயது பெண் வேலம்மாள் சந்தித்து உள்ளார். வேலம்மாளுக்கு சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். மாணவனின் தந்தை வேலம்மாளை கண்டித்துள்ளார்.இந்நிலையில் திடீரென மாணவனும், வேலம்மாளும் காணாமல் போயுள்ளனர்.இது குறித்து மாணவனின் தந்தை கோடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மாணவனை திருமணம் செய்து பெங்களுரில் குடும்பம் நடத்தி வந்த வேலம்மாளை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் மாணவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here