ஸ்டாலின் வழியில் சிம்பு!

சேலம்: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வழியில் நீர்நிலைகளை சுத்தமாக்கி பராமரிக்கும் திட்டத்தை துவக்கவுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்பு சமீபத்தில் காவிரி வாரியம் குறித்து பேட்டி அளித்தார். அதில், கர்நாடகா-தமிழக மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் வெறுப்பை வளர்க்கிறார்கள். தண்ணீர் பிரச்சனையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைகின்றனர்.
இதற்கு பதிலடி தரும்வகையில் கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து தங்கள் மனிதநேயத்தை காட்டவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  அவ்வாறு கன்னடமக்கள் தமிழர்களுக்கு தண்ணீர் அளித்து இணையத்தில் படங்களை பதிவிட்டிருந்தனர்
அதனைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள  பியூஷ்மனுஷ் என்ற தொண்டுநிறுவன நிர்வாகியை சிம்பு சந்தித்தார். சேலத்தில் உள்ள நீர்நிலைகளை புதுப்பித்து சிறப்பாக பராமரித்து வருகிறார் பியூஷ்மனுஷ். அவரிடம் நீர்நிலைகள் பராமரிப்பு குறித்த விபரங்களை நேரில் கேட்டறிந்தார். பியூஷ் மனுஷ் பராமரித்துவரும் நீர்நிலைகளை சுற்றிப்பார்த்தார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நீர்நிலைகளை முறையாக பராமரித்தாலே போதும். அதற்கான திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளேன் என்றார் சிம்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here