1.33லட்சம் மகள்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

டெல்லி:இந்திய நீதிமன்றங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தியாவில் சிறுமிகள் மீதான பாலியல் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன.
இக்குற்றங்களில் சிறுவர்களும் சிக்கி வருகின்றனர்.பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வயதுவித்தியாசமின்றி மரணதண்டனை அளிக்கவேண்டும் என்று நாடுமுழுவதும் குரல்கள் எழுந்துள்ளன.கத்துவாவில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும், உத்தரப்பிரதேசம் உன்னாவில் நடைபெற்ற பலாத்கார நிகழ்வும் இக்குரலை வலுசேர்ப்பதாக அமைந்துள்ளன.

2012ம் ஆண்டில் இருந்து பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 2012-2016வரை இக்கொடுங்குற்றங்கள் 60%அதிகரித்துள்ளன. ஆனால் அவற்றில் 25%வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் 40%அதிகரித்துள்ளது என்றும் புள்ளிவிபரம் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது.2012ம் ஆண்டு இயற்றப்பட்ட போக்சோ சட்டம் சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், வழக்கு விசாரணை ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படவேண்டும் என்றும் போஸ்கோ சட்டம் வலியுறுத்தியுள்ளது.சட்டங்கள் கடுமையாகி வருவதால் அதன்கீழ் தண்டிக்கப்படுவோரும் அதிகமாகி வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 43பேர் மீது பாலியல் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.                 
நாடு முழுவதும் 1.33லட்சம் பாலியல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒன்று இரண்டல்ல…ஒரு லட்சம் மகள்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றால் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றம் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here