கத்தார், சவுதி ராணுவங்கள் போர் பயிற்சி!!

கத்தார்: வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலக்கப்பட்டு 300நாட்களுக்கும் மேலாகின்றன.
இந்நிலையில், கத்தார், சவுதிஅரேபியா ராணுவம் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன.சவுதியின் வடக்கு பகுதியில் உள்ள ரஸ் அல் கய்ர் பகுதியில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
25நாட்கள் இந்த ஒத்திகை நடைபெற்றது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவையும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டன.
பயிற்சி நிறைவுநாள் நிகழ்ச்சியில் இருநாடுகளின் ராணுவத்தலைவர்களும் பங்கேற்றனர்.

மத்திய ஆசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும், அப்பகுதியை சேர்ந்த நாடுகள் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும் இப்பயிற்சி நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் மட்டுமின்றி மேலும் 25நாடுகளின் ராணுவத்துடன் சவுதி இத்தகைய கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here