காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!!

பெங்களூரு: பெங்களூரு காடுகோடி சென்னசந்திரா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்.
இவரது மனைவி நாகம்மா. இவர்களின் உறவினர் சீனிவாஸ். வெங்கடேஷ் வீட்டிற்கு சீனிவாஸ் வந்துள்ளார். அதில் நாகம்மாவுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.இது வெங்கடேஷிற்கு தெரியவந்தது. அவர் நாகம்மா மற்றும் சீனிவாசை கண்டித்தார்.
இதை கேட்டு சில நாட்கள் அமைதியாக இருந்த அவர்கள் மீண்டும் சந்திப்பை தொடர்ந்தனர். இதை அறிந்த வெங்கடேஷ் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இது சீனிவாசிற்கு தெரியவந்தது. அவர் நாகம்மாவிடம் கணவனை கொலை செய்துவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.கடந்த செவ்வாய்கிழமை இரவு கள்ளக்காதலர்கள் 2 பேரும் சேர்ந்து வெங்கடேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். மறுநாள் காலை இந்த கொலை வெளிச்சத்திற்கு வந்தது. தகவல் அறிந்து காடுகோடி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். மனைவி மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து இந்த கொலையை செய்திருப்பது உறுதியானது.இதையடுத்து நாகம்மா மற்றும் சீனிவாசை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here