கர்நாடகா பேரவை தேர்தல்! ஷாக் அடிக்க வைக்கும் மின் துறை அமைச்சர் சொத்து மதிப்பு!!

பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சிவகுமார் கர்நாடகாவின் எரிசக்தி துறை அமைச்சராக உள்ளார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் கனகபூரா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.கல்வியாளர், சமூக சேவகராக பணியாற்றி வரும் சிவகுமார் தனக்கும், மனைவிக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.730 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். சிவகுமார் பெயரில் 618 கோடியும், அவரது மனைவி பெயரில் 112 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.சிவகுமார் கடந்த 2013ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பை விட தற்போது 5 மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது 215 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதேபோல் அரவது மகள் ஐஸ்வர்யாவுக்கு 2013ஆம் ஆண்டில் 1.09 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்து 108 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here