இரத்ததான விழிப்புணர்வு! 6000 கிலோ மீட்டர் நடைபயணம் செய்யும் வாலிபர்!!

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த 33 வயதுள்ள கிரண் வர்மா நொய்டாவில் தனியார் பல்கலைகழகத்தில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்தார். தனது வேலையை விட்டு விட்டு பொதுமக்களிடம் இரத்த தானம் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.இரத்த தான விழிப்புணர்வு குறித்து 6000 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஜனவரி மாதம் காஷ்மீரிலிருந்து தொடங்கிய தனது நடை பயணத்தை அடுத்த ஆண்டு நிறைவு செய்ய உள்ளார். ஸ்ரீநகரிலிருந்து தொடங்கிய இந்த நடை பயணம் உதய்ப்பூர் சென்னை பெங்களூர் வழியாக கொச்சி சென்றடைந்துள்ளார்.இரத்தம் கிடைக்காமல் 12000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 6 லட்ச யூனிட் ரத்தம் பயனற்றுப்போவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.இளைஞர்கள் ரத்ததானம் செய்து வருகின்றனர் ஆனால் எப்போது எந்த நேரத்தில், யாருக்கு ரத்த தானம் செய்வது போன்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கிரண் வர்மா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here