அசாம் மாநில பாஜக கூட்டணியில் விரிசல்!

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில் ஆளும்கூட்டணியான பாஜக-அசாம் கனபரிஷத் கட்சிகள் இடையே உறவில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.
அசாமில் பேரவை தேர்தல்களை அம்மாநில கட்சியான அசாம் கனபரிஷத்துடன் இணைந்து பாஜக சந்தித்தது.

இக்கூட்டணிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சி மாறி கூட்டணி ஆட்சி அசாமில் மலர்ந்தது.
இந்நிலையில், தற்போது பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாமல் தவித்து வருகிறது அசாம் கனபரிஷத்.அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சி தோல்வியில் முடிந்ததால்தான் பாஜகவுடன் கைகோர்த்தோம்.
ஆனால், பாஜகவின் கொள்கைகள் மிகவும் அசாமுக்கும், அசாம் மக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்துபவையாக உள்ளன.பாஜக குடிபெயர்வு சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர முனைப்பு காட்டுகிறது.
இதனால் பங்களாதேசத்தில் இருந்து அதிகளவில் இந்துக்கள் மாநிலத்துக்கு குடிபெயர்ந்துவிடும் அபாயம் உள்ளது.

மேலும், மாநிலத்தின் வளர்ச்சிப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று விரும்புகிறோம். 2012 அசாம் உடன்படிக்கைக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக்கூடாது என்று பாஜகவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

ஆனால், பாஜக அரசு கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை காதுகொடுத்து கேட்க மறுக்கிறது.
இதனால் வானவில் கூட்டணியாக 2016 தேர்தலை சந்தித்த பாஜக கூட்டணியில் கொள்கைப்பிரிகை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here