5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

திருவள்ளூர்: ஒடிசாவை சேர்ந்த சின்ராவுத்-சம்பா தம்பதியினரின் 5 வயது மகள். இவர் பொன்னேரிபோராக்ஸ் பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளார்.அதே பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தர் பரவத் சிங். விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பிய சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை அப்பகுதி
மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக ஸ்டானலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பொதுமக்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here