Connect with us

International

வீட்டுச்சுவரில் ஓராண்டாக வசித்துவந்த மலைப்பாம்பு!

Published

on

பாங்காக்: வீட்டின் சுவற்றுக்குள் வசித்துவந்த 15அடிநீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
பாங்காக் நகரில் இந்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.அந்நகரில் வசித்துவரும் சம்சாய்சப்தங்க்(45) என்பவர் வீட்டில் ஒட்டியிருந்த வால் பேப்பரை புதுப்பிக்க நினைத்தார்.
இதற்காக பழைய வால்பேப்பர்களை சுவற்றில் இருந்து அகற்றினார்.அப்போது சுவற்றில் இருந்த துளையில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஒரு மணிநேரம் போராடி மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர்.சுவரின் ஓட்டை இருந்த பகுதியில் கடந்த ஓராண்டாக டிவியை வைத்திருந்தார் சம்சாய். இதனால் பாம்பு சுவற்றுக்குள் சென்ற விபரம் அவருக்கு இவ்வளவுநாள் தெரியாமல் போனது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator