பாஜகவுக்கு எதிராக விரைவில் புதிய கட்சி!

குஜராத்:பாஜக, காங்கிரசுக்கு எதிராக புதிய கட்சி ஒன்றை தொடங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்  பிரவின் தொகாடியா.

அயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டுமென வலியுறுத்தி அகமதாபாத்தில் உண்ணாவிரம் இருந்தார் பிரவின் தொகாடியா.   விஎச்பி-யின் முன்னாள் தலைவரான அவர், மூன்றாவது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்தார்.  அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இன்று இந்து சாதுக்கள் பலர் அவரை சந்தித்தனர். போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். மதியம் அவர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.  செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,  சாதுக்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டேன். எனது போராட்டத்துக்கு அரசுத்தரப்பில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
பணம்வாபஸ் திட்டம், மீடியா மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றால் விவசாயிகள், மக்கள், மீடியாக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  இதனை எதிர்த்து குரல் கொடுப்பேன். ராமர்கோவில், பசுபாதுகாப்பு குறித்து உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்துவேன்.  இதற்காக தனிக்கட்சி துவங்கும் திட்டம் உள்ளது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here