மாணவிகளுக்கு தினமும் மூளைச்சலவை!! நிர்மலாதேவியின் ரகசிய வாட்ஸ் ஆப் குழு!

சென்னை: அருப்புக்கோட்டை நிர்மலாதேவியின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் அதிர்ச்சிதரும் வகையில் உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.மதுரை பல்கலைக்கழகத்தில் புத்தாக்கப் பயிற்சிக்காக சென்றுள்ளார் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி. அங்கு அவரை நிழல்கும்பல் அணுகியுள்ளது.
அங்கிருந்தே வாட்ஸ் ஆப்பில் மாணவிகளை தொடர்புகொண்டு வற்புறுத்த தொடங்கியுள்ளார் நிர்மலா.வெற்றிக்கு திறமை மட்டும் போதாது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும். உலகத்தில் பணம், புகழுடன் வெற்றிகரமாக வாழ எவ்வளவு போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா என்றெல்லாம் மெசேஜ் அனுப்பி மூளைச்சலவை செய்துள்ளார்.
மாணவிகளுக்கு படிப்பிலும், நிதிஉதவியிலும், வேலைவாய்ப்பிலும் தன்னால் உதவமுடியுமென்று ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.

அடுத்த ஒரு வாரத்தில் தனது திட்டத்தை அரங்கேற்ற உள்ளதாகவும் அதற்கு சில பிரமுகர்கள் உதவ உள்ளதாகவும் நிர்மலா மெசேஜில் கூறியுள்ளார்.மாணவிகள் தினமும் முட்டை சாப்பிட்டு உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இருப்பதில் அழகான படத்தை வாட்ஸ் ஆப் ‘டிபி’-ல் வையுங்கள்.
தினமும் குட்மார்னிங், குட் ஈவ்னிங் மெசேஜை பெரிய எழுத்தில் அனுப்பி உறவை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்றெல்லாம் மெசேஜ் அனுப்பியுள்ளார் நிர்மலா.அவரது ரகசிய வாட்ஸ் ஆப் குழுவில் 6 மாணவிகள் இருந்தனர் என்றும் அவர்களில் பலர் நிர்மலாவின் கோரிக்கையை நிராகரித்ததாகவும் உரையாடலில் தெரியவந்துள்ளது.
நிர்மலாவிடம் விசாரணை நிறைவடைந்த பின் மாணவிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here